fbpx
Homeபிற செய்திகள்இன்று உலக மனநல தினம்:மனநல பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி?

இன்று உலக மனநல தினம்:மனநல பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர்10 உலகளவில் மிக முக்கியம் வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் (2025) தலைப்பு
“access to services”-”mental health in catastrophes and emergencies”.
பேரிடர் மற்றும் அவசரகாலங் களில் மனநல சேவை களுக்கான அணுகல், ஒவ்வொருவருக்கும் மனநல சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த தலைப் பின் அடிப்படை நோக்கம் ஆகும்.
பேரிடர் மற்றும் அவசர காலங்களில் ஏற்படும் இயற்கை பேரழிவு புயல், நிலநடுக்கம் ,சுனாமி, வெள்ளம், காட்டுத்தீ, போர், தொற்று நோய் பரவல், ஆகியவற்றால் ஏற்படும் பொரு ளாதார பாதிப்புகள் மற்றும் உடல் சேதங்கள் மனதிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தகால கட்டத்தில் பயம், அச்சம், குழப்பம், மனஉளைச்சல், துயரம், கவலை, தீயஎண்ணங்கள், மனஅழுத்தம், தன்னம்பிக்கை இன்மை உடல் நலபிரச்சனைகள், மேலும் முன்பு இருந்த மனநல பிரச்சனைகள் மோசம் அடைதல், குடும்பபிரிவுகள், இடம்பெயர்தல், வாழ்வாதார இழப்பு மற்றும் தூக்கமின்மை, தகுந்த உணவு இன்றி உடல்சோர்வு, போன்ற பிரச்சனைகள் வந்து பலர் வெளியில் கூறமுடியா மல் மௌனமாகவே துன்பப்படுகின்றனர்.
மனநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமை. மனநலம் இல்லாமல் முழுமையான உடல்நலம் இருக்க முடியாது.
மனநலமும் உடல் நலமும் நாணயத்தின் இருபக்கம் போன்றது.

உலக அளவில் சுமார் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு அதாவது மொத்தமக்கள் தொகையில் சுமார் 13.6% பேருக்கு மனநலப்பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 90 வயதை கடந்தவர்கள் வரை பாதிக்கப்பட்டு கொண்டு இருப்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமுக்கிய மான ஒன்று.
மனப்பதட்டம், மனச்சோர்வு, போதைப்பழக்கம், மனச்சிதைவு, தற்கொலைகள் ஆகியவை மனநல பாதிப்புகள் ஆகும்.
உலக அளவில் பதிவாகும் ஒவ்வொரு 100 உயிரிழப்புக்களில் ஒன்று தற்கொலைக்கு காரணமாக உள்ளது.

15 முதல் 29 வயது இளம் தலைமுறையினரிடம் தற்கொலைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
மனநலக்குறைபாடு உள்ள வர்களில் 70 to 83% பேர் சிகிச்சை பெறவில்லை இதற்கு காரணம் விழிப்புணர்வு இல் லாமை, வெட்கம், சமூகநாணம், மற்றும் சிகிச்சை வசதி குறைவு நகர்ப்புறங்களில் 13.5% கிராமப் புறங்களில் 6.9% பாதிப்புகள் உள்ளது. இந்திய இளைஞர்களில் 20 to 30 % மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். 70% மாணவர்கள் கவலை / மன அழுத்தம் ஆகியவற்றில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
நகர்புறத்தில் வாழும் இந்தி யர்களில் 53% பேர் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு (Stress) உள்ளா கின்றனர். போதுமான உறக்கம், ஆரோக்கியமான உணவு, மென் மையான உடற்பயிற்சி, யோகா, மற்றும் தியானம், சமநிலையான வாழ்க்கைமுறை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல்.

தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனை பெறவும், எதிர்மறை எண்ணங்கள் தோன் றினால் மனநல மருத்துவரை அணுகவும்.
அரசும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும் இதைப்பற்றிய விழிப்புணர்வை தீவிரபடுத்த வேண்டும். மனநல ஆலோசனைக்கு எண் 14416ஐ அணுகலாம்.

கட்டுரையாளர்:
Dr.N.S.மோனி M.D.,F.I.P.S
மூத்த மனநல மருத்துவர்
Cell: 9842213043
Mail id: nsmony@gmail.com
பாலாஜி மூளை, நரம்பியல் மற்றும் மனநல மருத்துவ மையம், கோவை.

படிக்க வேண்டும்

spot_img