Homeபிற செய்திகள்வாள்வீச்சு போட்டியில் திருவள்ளூர் அணி சாம்பியன்

வாள்வீச்சு போட்டியில் திருவள்ளூர் அணி சாம்பியன்

கோவை திருச்சி சாலையில் உள்ள எஸ் என் அரங்கத்தில் கடந்த 21, 22 தேதிகளில் மாநில அளவிளான தாங்டா போட்டி நடைபெற்றது. வாள்வீச்சு மற்றும் கேடய வாள்வீச்சு என நடைபெற்ற இதில் கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மா ணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதன் துவக்க விழா தமிழ்நாடு தாங்டா சங்கத்தின் நிறுவனர் தலைவர் செல்வராஜ் ஆசான் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காவல் பயிற்சி மையத்தின் முதல்வர் துணை காவல் கண்காணிப்பாளர் செட் ரிக் மானுவேல் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கற்பகம் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயக்குநர் சுதாகர், லியோ ஆர்த்தோ கேர் மருத்துவர் லியோ பெர்னார்டு ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தார்கள். மினி சப் ஜூனியா, சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என எடை அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் வாளை லாவகமாக வீசினர். இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் மணிப்பூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

மேற்படி போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை திருவள்ளூர் மாவட்ட அணியும், இரண் டாம் இடத்தை கோவை மாவட்ட அணியும் வென்றது.

படிக்க வேண்டும்

spot_img