Homeபிற செய்திகள்புற்று நோய் விழப்புணர்வு கருத்தரங்கம்

புற்று நோய் விழப்புணர்வு கருத்தரங்கம்

ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையின் நோயியல் மற்றும் அறுவை சிகிச்சைத் துறைகளின் சார்பில் “மார்பக புற்றுநோயின் புதுப்பி ப்புகளில் ஒரு நுண்ணறிவு”; என்கிற கருப்பொருளின் அடிப்படையில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை கல்லூரியின் புலமுதல்வர் போரா சிரியர் மருத்துவர் ஏ.சந்திர போஸ் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் வி; சுந்திரவேல் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

மேலும் இக்கருத்தரங்கில் நோயியல் துறையின் தலைவர் மருத்துவர் எம்.ஏ.வைத்தியலிங்கம் மற்றும் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் மருத்துவர் டி.சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

முன்னதாக கருத்தர ங்கின் ஒருங்கிணை ப்பாளரும், உதவி பேராசி ரியருமான மருத்துவர் தமிழரசன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொண்ட கோவை மருத்துவ மையம் மற்றும் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்களையும் மற்றும் மாணவர்களையும் வரவேற்று பேசினார்.

முதல் நிகழ்வாக, முற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கில் “மார்பகத்தின் உடற்கூறியல்” என்கிற தலைப்பில் மருத்துவர் அருண்குமார், “கதிரியக்க ஆய்வு முறைகள்” என்கிற தலைப்பில் மருத்துவர் ஏ.வி. பிரபாகரன் மற்றும் “அறுவை சிகிச்சை நோயியல்” என்கிற தலைப்பில் மருத்துவர் மது ராஜேஸ்வரி ஆகியோர் காணெலி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.

பின்னர் மதியம் நடைபெற்ற கருத்தரங்கில் “மதிப்பீடு மற்றும் மேலாண்மை” என்கிற தலைப்பில் மருத்துவர் மகேந்திரன், “புற்று நோயின் மூலக்கூறு வகைப் பாடு” என்கிற தலைப்பில் மருத்துவர் கே.ஆகாஷ் மற்றும் “தனிப்பயன £க்கப்பட்ட சகாப்தத்தில் மார்பக புற்று நோய் மேலாண்மை” என்கிற தலைப்பில் மருத்துவர் வேதா பத்மபிரியா ஆகியோர் மாணவர்களுக்கு விவரித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கில் “நோய் க்குறியியல் அறிக்கையினை முன்னிருத்தி முறையான சிகிச்சை” என்கிற தலைப்பில் மருத் துவர் பரத் ரங்கராஜன், “கதிரியக்க சிகிச்சை” என்கிற தலைப்பில் மருத்துவர் மது சாய்ராம் மற்றும் “புற்று நோயின் வலி மேலாண்மை” என்கிற தலைப்பில் மருத்துவர் புனிதவதி ஆகியோர் காணெலி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளித்து, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்தார்கள்.
பின்னர் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்க ப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் முடிவில், ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் மருத்துவர் ஆகாஷ் அவர்கள் புற்று நோய்க்கான அனைத்து வகையான சிகிச்சைகளும் தங்களது கல்லூரியின் நோயியல் மற்றும் அறுவை சிகிச்சைத் துறைகளின் மூலமாக மிக குறைந்த கட்டணத்தில் வழங்கி வருதாக கூறி நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த புலமுதல்வர், கண்காணிப்பாளர் மற்றும் பேராசிரியர்களையும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் பாராட்டினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img