fbpx
Homeபிற செய்திகள்தேவை இல்லாதவர்களை கோவையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்: மாவட்ட நிர்வாகத்திற்கு அண்ணாமலை கோரிக்கை: டூவீலரில் வானதியுடன்...

தேவை இல்லாதவர்களை கோவையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்: மாவட்ட நிர்வாகத்திற்கு அண்ணாமலை கோரிக்கை: டூவீலரில் வானதியுடன் பிரசாரம்

கோவை வடக்கு, சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு துவங்கியது. இப்பேரணியை பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து இருசக்கர வாகனத்தை இயக்கினார். வானதி சீனிவாசன் அவருடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் நூற்றுக் கணக்கான பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:- தேர்தல் கணிப்புகள் எல்லாம் நமக்கு சாதகமாக வர ஆரம்பித்து விட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் கணிப்பு, நிலவும் அலையை இன்னும் சரியாக கணிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. மத்திய அரசின் நிதியை பயன்படுத்தக் கூடிய அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

தி.மு.க அராஜக அரசியலை வன்முறை அரசியலை கட்டவிழ்த்து விட்டு உள்ளனர்

மக்கள் எப்பொழுதும் வாக்கு பெட்டியில் தான் பேசுவார்கள். அதனை ஏப்ரல் 23 ஆம் தேதி பேச போகிறார்கள்.

செந்தில் பாலாஜி எப்பொழுது தான் அவரது தவறை ஏற்றுக் கொண்டு உள்ளார்? நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி செந்தில் பாலாஜி பேசுவார். அவ்வாறு தான் இருப்பார். 23 ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையை கிழிப்பார்கள்.

தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆட்களை கொண்டு அவர்களது பணியை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் தேவை யில்லாதவர்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்த பொழுதே வானதி சீனிவாசன் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை வடக்கு தொகுதியிலும் 5000 ரூபாய் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எவ்வளவு தான் பணம் கொடுத்தாலும் அது இந்த தேர்தலை பாதிக்காது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img