கோவை மாநகர போக் குவரத்து காவல் துறை பீளமேடு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிங்காநல்லூர் உதவி ஆய்வாளர் சரண்யா ஆகியோர்களிடம் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளருமான லயன் செந்தில் குமார் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன் கிருஷ்ணமூர்த்தி இணைந்து கூலர் கண்ணாடிகளை போக் குவரத்து காவலர்களுக்கு வழங்கினர்.
அப்போது உதவி ஆய்வாளர் சந்திரா, உதவி ஆய்வாளர் செல்லமாரி, தலைமை காவலர்கள் அருண் பிரசாத், மனோகரன், மாசாணிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர். பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் போக்கு வரத்து காவலர்கள் சுமார் 40 பேருக்கு இந்த கூலர் கண்ணாடி வழங்கப்பட்டது.



