டைட்டன் ஐ+ சமீபத்தில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ரேம்கள் மற்றும் சன்கிளாஸ்களுக்கு 50 சதவீத சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த சலுகை ஜனவரி 31 வரை செல்லுபடியாகும்.
டைட்டன், ஃபாஸ்ட் ட்ராக், ரேபேன், வோக், ஒக்லே, டாமி, ஹில்ஃபிகர் (Titan, Fastrack, RayBan, Vogue, Oakley, Tommy Hilfiger) போன்ற 40-க்கும் மேற்பட்ட பிரபல பிராண்டுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரேம்கள் மற்றும் சன்கிளாஸ்களுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது.
மேலும் கார்டியர், டியோர் போன்ற பிற ப்ரீமியம் பிராண்டுகளுக்குமான தள்ளுபடி சலுகையை தனது 860-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
சிறப்புத் தள்ளுபடி சலுகைகளில் கிடைக்கும் ஸ்டைலான ஃப்ரேம்கள் ரூ.600 மற்றும் சன்கிளாஸ்கள் ரூ.699 என்ற விலையில் தொடங்குகின்றன. இதனால் இந்த சிறப்புத் தள்ளுபடி அனைத்து தரப்பினருக்கும் சிறந்த ஷாப்பிங் விழாவாக அமைகிறது.
பாஷ் மற்றும் லாம்ப்
இந்த சலுகை தவிர, வாடிக்கையாளர்கள் பாஷ் மற்றும் லாம்ப், அல்கான் மற்றும் ஜே & ஜே போன்ற ப்ரீமியம் பிராண்டுகளின் உயர்தர கான்டாக்ட் லென்ஸ்கள் போன்றவற்றுடன் டைட்டன் ஐ+ -ல் இருந்து தயாரிக்கப்படும் தெளிவான பார்வைக்கான க்ளியர்சைட் லென்ஸ்கள், பனியைத் தடுத்து தெளிவான பார்வையை அளிக்கும் ஆண்டி ஃபாக் லென்ஸ்கள், ஆடியோ மற்றும் வீடியோ சன்கிளாஸ்கள் [[ClearSight Lenses, Anti-Fog Lenses, and Audio and Video Sunglasses] போன்ற புதுமையான நவீன தயாரிப்புகளையும் வாங்கலாம்.
வழக்கமான கண் பரிசோதனைகளுக்கு, டைட்டன் ஐ+-ல், சங்கர நேத்ராலயாவால் பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட கண் பரிசோதனைப் பயிற்சி நிபுணர்கள் (ஆப்டோமெட்ரிஸ்டுகள்) மூலம் பிழை இல்லாத துல்லியமான கண் பரிசோதனைளைப் பெற முடியும். இவ்வாறு டைட்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.