fbpx
Homeபிற செய்திகள்தேசிய குத்து சண்டை போட்டியில் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள்...

தேசிய குத்து சண்டை போட்டியில் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான தேசிய குத்து சண்டை போட்டி ஜனவரி 11 முதல் 14ஆம் தேதி வரை ஹரியானா மாநிலம் ரிஸிக்குள் என்ற பள்ளியில் நடைபெற்றது. இதில் தேசிய அளவில் இருந்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மைய மண்டலங்கள் என்று இந்தியாவில் இருந்து ஐந்து மண்டலங்களுக்கும் அயலக சிபிஎஸ்சி பள்ளிகளில் இருந்து ஒரு மண்டலம் என ஆறு மண்டலங்களில் இருந்து சுமார் 1600 மாணவர்கள் கலந்து கொண்டனர்,

தெற்கு மண்டலமான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட மாநிலங்கள் சார்பாக கலந்து கொண்டவர்களில் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியிலிருந்து 17,19,வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 12 ஆம் வகுப்பு தரணீஷ் ஆதிஷ் மற்றும் 11ம் வகுப்பு ஸ்ரீ ராம் சுந்தர் ஆகியோரும் பெண்கள் பிரிவுகளில் பன்னிரண்டாம் வகுப்பு ஸ்ரீ வித்யா மற்றும் பதினொன்றாம் வகுப்பு ரஷிதா ஆகியோரும் கலந்துகொண்டு தேசிய அளவில் தகுதி பெற்றனர்.

பதக்கம்

மேலும் இதில் 19 வயதுக்குட்பட்ட 57 கிலோ எடை பிரிவில் ஸ்ரீவித்யா தேசிய அளவில் மூன்றாம் இடத்தில் வெண்கல பதக்கத்தையும் 17 வயதுக்குட்பட்ட 65 கிலோ எடை பிரிவில் ரஷிதா தேசிய அளவில் மூன்றாம் இடத்தில் வெண்கல பதக்கத்தையும் பெற்று பள்ளிக்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் அறங்காவலர் மோகன்தாஸ் மற்றும் முதல்வர்கள் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினர்.

இந்த வெற்றி ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் 25ஆம் ஆண்டின் மற்றுமோர் மைல்கல். சிறந்த பயிற்சியும் கூட்டு முயற்சியும் இந்த வரலாறு காணாத வெற்றியை தந்துள்ளதாக பள்ளியின் தாளாளர் மணிமேகலை மோகன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img