fbpx
Homeபிற செய்திகள்பாஸ்ட்ராக்கின் புதிய ‘ஸ்மார்ட் வாட்ச்’ அறிமுகம்

பாஸ்ட்ராக்கின் புதிய ‘ஸ்மார்ட் வாட்ச்’ அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரியதும், எகோபித்த வரவேற்பை பெற்றது மான இளைய தலைமுறையினருக்கான அணிகலன்கள் மற்றும் பயன்பாட்டு அணிகலன்கள் பிராண்டான ஃபாஸ்ட்ராக், புதிய Reflex Beat+ அறிமுகம் செய்துள்ளது.

அனைவருக்கும் வாங்கும் வகையிலான மலிவு விலை நவீன அணிகலன் பிரிவில் இறங்குகிறது. 1.69” (UltraVu) Display கொண்ட இந்தப் புதிய ஸ்மார்ட் வாட்ச் 60பிக்ஷ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500ஸீவீts பிரகாச (பிரைட்னஸ்) திறனுடன் வருகிறது.

ஸ்மார்ட் வாட்ச் 1.69” UltraVu Display மற்றும் 60 Sports Modes பயன்முறை மற்றும் பயன்பாட்டு அம்சங்களுடன், அமேசான் ஃபேஷனில் பிரத்யேகமாக கிடைக்கிறது.

அமேசானின் குடியரசு தின விற்பனை யில் Fastrack Reflex Beat+ ஐ, குறைந்த மற்றும் சிறப்பு அறிமுக விலையாக ரூ.1495-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹார்ட் ரேட் மானிட்டர், வுமன் ஹெல்த் மானிட்டர், ஸ்லீப் டிராக்கர் மற்றும் ஸ்பிஓ2 மானிட்டர் போன்ற அத்யாவசிய கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டது. இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, தடையற்ற அருமையான அனுபவத்தை அதை அணிந்திருப்பவர்களுக்கு வழங்குகிறது.

அமேசான் ஃபேஷன்

டைட்டன் கம்பெனி லிமிடெட் வியரபிள் டிஜிட்டல் ஹெல்த் இன்னோவேட்டர் பிரிவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ரவி குப்புராஜ் கூறியதாவது:
அமேசான் ஃபேஷன் உடனான பிரத்யேக கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அனைவராலும் வாங்க முடிகிற மலிவு விலையில், அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் எங்களின் முதல் விற்பனையான ரிஃப்ளெக்ஸ் பீட்+ ஐ வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஸ்மார்ட் வாட்ச்கள் இப்போது நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு தங்களது அன்றாட செயல்பாடுகளுக்கான அணிகலனாகவும், நவீன அம்சங்களுக்குமான அத்யாவசிய தேவையாக உள்ளது என்றார்.

அமேசான் ஃபேஷன் இந்தியா இயக்குநர் மற்றும் தலைவர் சௌரப் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: நவீன ஸ்மார்ட் வாட்ச்களுக்கான அதிகரித்து வரும் தேவை 2023 -ம் ஆண்டில் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று நம்பப்படுகிறது.

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் பீட்+ உங்கள் ஆரோக்கியத்தை கண்காணிப்பது மட்டுமின்றி கேமரா மற்றும் இசைக் கட்டுப்பாட்டு அம்சங்களுடன், பொழுதுபோக்கிலும் சௌகரியத்துடன் எளிய முறையில் கொண்டாட உதவுகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img