திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபம் திருவிழா நடத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன்
கோயில் உள்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.
கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராமப்பிரதீபன் வரவேற்றார்.
கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது.
கார்த்திகை தீப திருவிழாவின்போது அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஒவ்வொரு துறை வாரியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து இங்கு ஆய்வு நடத்தப்பட்டது .
டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வாக ஆறாம் நாள் உற்சவமாக வெள்ளி ரதம் ஏழாம் நாள் உற்சவத்தில் மகா ரதங்கள் மாடவீதியில் வலம் வரவுள்ளது. பத்தாம் நாள் உற்சவத்தன்று 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் அடிப்படை வசதி குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உணவு வசதிகள். திருவிழாவின் போது மாத வீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டு திருவிழாவின் போது என்னென்ன சிரமங்கள் ஏற்பட்டதோ அதை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் .
பரணி தீபத்தன்று 7500 பேரும், மகா தீபத்தைப் பொருத்தம் 11,500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். தீபத்தன்று மலையேற 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோவில் பாதுகாப்பு பணியில் தேவையான போலீசார் மட்டுமே ஈடுபடுத்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு அதிகரித்துள்ளார்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய ஆய்வு நடத்தி வருகிறார். கிரிவல பாதையில் 85 மருத்துவ குலுக்கல் . செயல்படும். மகாராஜா வெள்ளோட்டத்தின் போதும் மாட வீதிகளில் மின்னிணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும். தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபத் திருவிழாவின் போது நிர்ணயத்த கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் பரணி தீபத்திற்கு 500 பேருக்கும் மகா தீபத்திற்கு 1100 பேருக்கும் கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.