Homeபிற செய்திகள்ரூ.5.12 கோடியில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்

ரூ.5.12 கோடியில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்கள்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர் விழி தலைமையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், பாப்பன்குளம் ஊராட்சியில் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், மைவாடி ஊராட்சியில் ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நுழைவுவாயில் என மொத்தம் ரூ.2.10 கோடியில் முடிவுற்ற திட் டப்பணிகளை திறந்து வைத்தார்.

பின்னர் மடத்துக்குளம் வட்டத்தில் ரூ.4.92 கோடியில் அமராவதி பிரதானக் கால்வாயின் குறுக்குக்கட்டிட அமைப்புகளை புரனமைக்கும் பணி, மைவாடி ஊராட்சி கோளரப்பட்டியில் ரூ.20.20 லட்சத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கட்டிடம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள்.

தொடர்ந்தவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
“எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு உடனடியாக கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச் சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 என்கிற மகத்தான திட்டத்தை வழங்கியது வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img