fbpx
Homeபிற செய்திகள்‘பாரத் அரிசி’ - எங்கும் கிடைக்க வேண்டும்!

‘பாரத் அரிசி’ – எங்கும் கிடைக்க வேண்டும்!

“பாரத் அரிசி” என்ற பெயரில் ரூ.29 -க்கு மானிய விலையில் ஒரு கிலோ அரிசி யை மத்திய அரசு அறிமுகப்படுத்திவுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் இந்த அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைக்கும். இதனை ஒன்றிய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.

முதற்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய உணவுக் கழகம் இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே பாரத் ஆட்டா மற்றும் பாரத் தால் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது “பாரத் ஆட்டா” என்ற பெயரில் கோதுமை மாவு கிலோ ரூ.27.50க்கும், “பாரத் தால்” என்ற பெயரில் வெள்ளை கொண்டைக் கடலை கிலோ ரூ.60-க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஓராண்டில் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதிக்கு தடை இருந்தும், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே விலையை கட்டுப்படுத்தும் வகையில் “பாரத் அரிசி”-யை சந்தையில் அறிமுகப்படுத்திய ஒன்றிய அரசின் முடிவு வரவேற்கத் தக்க நல்லதோர் திட்டம் தான்.

ஆனால் இத்திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பாரத் அரிசி, பாரத் ஆட்டா, பாரத் பருப்பு எங்கே கிடைக்கும் என்பதை அறியக்கூட முடியவில்லை.

எனவே நாடு முழுவதும் ஒன்றிய அரசின் இந்த சலுகை விலை அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை பரவலாக்கப்பட வேண்டும்.
கிராமங்கள் வரை இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு பலன் கிடைக்கும்; திட்டத்திற்கும் வெற்றி கிடைக்கும்!

படிக்க வேண்டும்

spot_img