உலக அமைதி தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரோட்டரி மாவட்டம் 3203 ன் ஆளுநர் தனசேகரின் பரிந்துரையின் பேரில், அவிநாசி அருகேயுள்ள ரேவதி நர்சிங் கல்லூரி வளாகத்தில் 37 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 3203 ரோட்ராக்ட், இன்டராக்ட் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு அமைதிப்புறா வடிவத்தில் அணிவகுத்து நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
3203ன் ஆளுநர் தனசேகர், மாவட்ட பயிற்றுநர் இளங்குமரன், ஆலோசகர் சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருந் தனர். ரோட்டரி மாவட்ட ரோட் ராக்ட், இன்ட்ராக்ட் சேர்மன் ராஜலட்சுமி, மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி செல்வ விக்னேஷ், டாக்டர் ஹரி உள்ளிட்டோர் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

இதில் ரோட்டரி பவுண்டேஷன் பன்னாட்டு தலைவர் ஹோல்கர் நாக், டிரஸ்ட்டி பரத் பாண்டியா, பன்னாட்டு ரோட்டரி இயக்குநர் முருகானந்தம், பன்னாட்டு ரோட்டரி முன்னாள் தலைவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ரவீந்திரன், பெங்களூர் ரவிசங்கர் ட கோஜூ, ரோட்டரி பவுண்டேஷனின் மண்டல உதவி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஆகியோர் ஹெலிகாப்டர் மூலமாக மனித தலைகளால் ஆன அமைதிப்புறாவை பார்வையிட்டனர்.
பொதுமக்கள் பலரும் பாராட்டிப் பார்த்த இந்நிகழ்வு எலைட் வேர்ல்டு ரிக்கார்டு, இண்டியன் புக்ஸ் ஆப் ரிக்கார்டு மற்றும் இன்டர்நேஷனல் ப்ரைடு புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்டு ஆகிய மூன்று நிறுவனங்களின் அதிகாரிகள் பார்வையிட்டு உலக சாதனைக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்த நிகழ்வின் நிறைவில் மாவட்ட கவர்னர் தனசேகர் வாழ்த்தினார்.



