கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடை பெற்று வரும் 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் டால்மேஷன், கிரேட் டேன், லேப்ரடார், கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், பெல்ஜியன் மலி னாய்ஸ், ராஜ பாளையம், சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட 33 வகைகளைச் சேர்ந்த 172 நாய்கள் பங்கேற்றன.
வெளிநாட்டு இனப் பிரிவில் ஜோலார்பேட் டையைச் சேர்ந்த அருள் உதயராஜின் பெல்ஜியன் மலினாய்ஸ் நாயும், நாட்டு இனப் பிரிவில் வரட்டனப்பள்ளியைச் சேர்ந்த சூரத்தின் சிப்பிப்பாறை நாயும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. குட்டி நாய்கள் பிரிவில் ராகவேந்திரன் மற்றும் குணசேகரனின் நாய்கள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற நாய்களின் உரி மையாளர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சரத் நடுவ ராக செயல்பட்டார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவ லர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



