கோவை பாலக்காடு சாலை நவக்கரை செங்கன்பாலம் வனப் பகுதியில், ஈ.ஏ.எஸ்.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் ஈக்கோ எவால்வ் கிளப், யங் இந்தியன்ஸ் யுவா அமைப்பு மற்றும் மதுக்கரை வனச்சரகம் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள், காலி பாட்டில்கள் அகற்றும் சிறப்பு தூய்மை முகாமை துவக்கின. நிகழ்ச்சியில் நவக்கரை பிரிவு வனவர் ராஜன் கலந்து கொண்டு காடுகளை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என வலியுறுத்தினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் வனத்துறையினருடன் இணைந்து சோளக் கரை சுற்று முதல் மூன்றாவது ஏ.ஐ. டவர் பகுதி வரை தூய் மைப்பணியில் ஈடுபட்டு, 61 மூட் டைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தனர். ஈ.ஏ.எஸ்.ஏ. கல்வி நிறுவனங்க ளின் வழிகாட்டுதலின்படி, இத்தூய் மைப் பணி வாரந்தோறும் சனிக் கிழமைகளில் 100 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.



