கோவை இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் உழவே தலை என்ற தலைப்பில் 5-வது வேளாண்மை கருத்தரங்கு கொடீ சியா எப் ஹால் முதல் மாடியில் நடக்கிறது.
இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு உதவி தலைவர்கள் ராஜேஷ் பி – லுண்ட் ,துரைராஜ், ஒருங்கிணைப்பாளர் பிரதீப், உறுப்பினர் எஸ்.ஜே.பாலகிருஷ்ணன், மணி சுந்தர்.ஆனந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: –
இந்த வேளாண்மை கருத்தரங்கு வருகிற 15-ந்தேதிகாலை 8-&30 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் வி.கீதாலட்சுமி தொடங்கி வைக்கிறார்.
கருத்தரங்கில் விஞ்ஞானி கருணாகரன் கணேசன், டாக்டர் ராம் ராஜ சேகரன், பேராசிரியர் லோகநாதன், மணி சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த கருத்தரங்கில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுவார்கள்.
மேலும் அடுத்த தலைமுறை விவசாயத்திற்கு இந்த கருத்தரங்கு பயன் உள்ளதாக இருக்கும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.