fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் பேரரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் சதய விழா

திருப்பூரில் பேரரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் சதய விழா

திருப்பூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் 1348-வது சதய திருவிழா நேற்று காலை நடந்தது. மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாலை அணி வித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

‘மெய்க்கீர்த்தி’ என்ற அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது. . அதே போன்று புதிய பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் திரு உருவ படத்திற்கு திருப்பூர் மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மரியாதை செய்யப் பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது.

இதில் முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் எஸ்.ஆர். ரமேஷ், அருண், தர்மராஜ், சுரேஷ், வெங்கடேஸ்வரன், சிவனேஸ்வரன், வடிவேல், பால்ராஜ், ஜோதிபாஸ், செல்வராஜ், ஜெகதீஷ், பாண்டி, சங்கர், சத்திய நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img