fbpx
Homeபிற செய்திகள்சாரதா டெர்ரி புராடெக்ஸ் நிறுவனத்தில் ரத்ன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சாரதா டெர்ரி புராடெக்ஸ் நிறுவனத்தில் ரத்ன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம் அருகே வனப்பத்திரகா ளியம்மன் கோயில் சாலை யிலுள்ள சாரதா டெர்ரி புராடெக்ஸ் நிறுவனத்தின் ரத்ன விநாயகர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.

இதனையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின் இன்று காலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோயி லில் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் 6.30 மணிக்கு கோயிலை சுற்றி புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ரத்தின விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப் பட்டது.

கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோயில் ஐயர் விவேக் செய்து வைத்தார். சாரதா டெர்ரி புராடக்ட்ஸ் பிரை« வட் லிமிடெட் நிர்வாக தலைவர் கண்ணப்பன், நிர்வாக இயக்குநர் விக்ரம் கிருஷ்ணன் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது.

படிக்க வேண்டும்

spot_img