fbpx
Homeபிற செய்திகள்ஓ.இ. மில்களில் உற்பத்தி நிறுத்தம்- 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு

ஓ.இ. மில்களில் உற்பத்தி நிறுத்தம்- 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு

திருப்பூர் அடுத்த மங்கலத்தில் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் எம்.ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது:

ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேறும் கழிவு பஞ்சு மற்றும் ஆயத்த ஆடைகள் நிறு வனங்களில் இருந்து வெளியேறும் பேப்ரிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து 2 நெம்பர் முதல் 40ம் நெம்பர் நூல்கள் வரை கிரே மற்றும் 45க்கு மேற்பட்ட கலர் நூல்களை உற்பத்தி செய்து கைத்தறி, விசைதறி மற்றும் Madeups துறைகளுக்கு நூல்களை கொடுத்து வருகின்றோம்.

கடந்த பத்து மாதங் களாக பருத்தி விலை 1,20,000&ல் இருந்து 55 ஆயிரமாக குறைந்தும் கூட பருத்தி விலையில் இருந்து தொடர்ந்து 70% மேல் கோம்பர் வேஸ்ட் விலையையும் இதர கழிவு பஞ்சின் விலைகள் 40% மேல் விற்பனை செய்வதினால் ஓ.இ நூல்களுக்கு விலை கிடைக்காமல் கிலோவுக்கு 20 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுவதினால் கடந்த ஒரு வருட காலமாக உற்பத்தியை பாதிக்கு மேல் குறைத்துள்ளோம்.

இந்நிலையில் தமிழகத்தில் தாழ்வழுத்த மின்சார இணைப்பு பெற்ற குறு சிறு நடுத்தர மில்க ளுக்கு டிமாண்ட் சார்ஜ் கிலோ வாட் ஒன்றுக்கு 35 ரூபாய் என மாதம் ஒன்றுக்கு 3920 ரூபாயாக செலுத்தி வந்தோம்.

தற்போது கிலோவாட் ஒன்றுக்கு 153 ரூபாய் என நான்கு மடங்குக்கு மேல் உயர்த்தி மாதம் ஒன்றுக்கு மில்லை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் ரூபாய் 17,200 கட்டாயம் டிமாண்ட் சார்ஜ் செலுத்தியே ஆக வேண்டும்.

பசுமை புரட்சி செய்து வரும் மறுசுழற்சி துறையான ஓ.இ மில்களுக்கு காலை 6-10 மாலை 6-10 என இந்த நேரத்தில் நூலை உற்பத்தி செய்தால் பீக்ஹவர்ஸ் சார்ஜ் என கூடுதலாக 15% மின் கட்டணம் விதித்து உள்ளதால் தொழிலே செய்ய இயலாத நிலை ஏற் பட்டு உள்ளது.

வட மாநிலங்களில் ஜவுளி துறைகளை ஊக்குவிக்க பல்வேறு மானியங்களை அறிவித்து வரும் வேளையில் கடந்த பத்து மாதங்களாக மூலப்பொருள் விலை ஏற்றத்தினால் ஏற்கனவே பெரும்பாலான மில்கள் 40-50 சதவீதம் இயக்கியும் சிலர் முழு உற்பத்தியை நிறுத்தி உள்ள சமயத்தில்
இயங்காத, பாதியாக இயங்கும் மில்களுக்கு டிமாண்ட் சார்ஜ் -ஐ யும், பீக் ஹவர்ஸ் சார்ஜ்-யும் வசூலிப்பதினால் சொல் லெண்ணா துயரத்தில் உள்ளோம்.

நாட்டிலேயே அதிக ஓ.இ மில்கள் உள்ள தமிழ கத்தில் மின்கட்டண உயர்வு மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப நூலுக்கு விலை கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி மற்றும் தவணை செலுத்த இயலாமல் கடும் துயரத்தில் உள்ளதினால் மத்திய மாநில துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் முழு உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு மேற்கொண்டு உள்ளோம்.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.இவ் வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img