வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பாதிப்பு உள்ளாகி உள்ளனர். அனைத்து பகுதி களிலும் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது
இதனால் திடீரென்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பகுதியில் இன்று ஒரே நாள் 10 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது.
வால்பாறையில் அதிக அளவு மழை பெய்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவ மழை அதிதீவிரமடைந்து உள்ளதால் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் வால்பாறையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரினால் சேதம் அடையும் பகுதிகளுக்கு மீட்பு குழு வந்துள்ளார்கள்.
தற்பொழுது பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது பனிப்பொழிவும் அதிகரித்து உள்ள சூழ்நிலையில் சாலைகள் அனைத்தும் பனி பொழிவால் மூடிய நிலையில் உள்ளன அருகில் இருக்கும் பொருட்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது இதனால் , வால்பாறையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.