திருப்பூர் விஜயாபுரம் கிட்ஸ் கிளப் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வினோதினி கார்த்திக், பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குனர் ரமேஷ், நிர்வாக செயலாளர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா பூபதி மற்றும் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் கராத்தே மற்றும் பிரமிடு நடனமும் நடைபெற்றது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாடகம் 35 நிமிடங்களில் அரங்கேற்றம் செய்து மாணவர்கள் அசத்தினர்.