இந்திய உடல் உறுப்பு தானம் மாதத்தையொட்டி உடல் உறுப்பு தானம் வழங்குவது பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூர் நறுவீ மருத்துவமனை வளாகத்;தில் நடைபெற்றது.
75-வது இந்திய சுதந்திர தின விழாவையொட்டி மத்திய அரசின் தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனம் ஜுலை 1 முதல் 31 வரை இந்திய உடல் உறுப்பு தானம் மாதமாக அறிவித்து கடைபிடித்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 3) உடல் உறுப்பு தானம் வழங்குவது
பற்றி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.
அதன்படி வேலூர் நறுவீ மருத்துவமனை வளாகத்தில் உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவமனைத் தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர்
டாக்டர் பால் ஹென்றி, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப்
ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொதுமேலாளர் நிதின் சம்பத், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.