கோவை மாவட்டத்தில் வருகின்ற சனிக்கிழமை ஜி.என்.மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அருகில் மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், மாவட்ட வேலை வாய்ப்பு துணை இயக்குநர் கருணாகரன், கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் லட்சுமணசாமி, வேலைவாய்ப்பு துணை அலுவலர் விஜயலட்சுமி, கோவை வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.



