திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நிரந்தரமாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை தாமதமாகிறது.
மற்றும் அரசு/தனியார் அலுவலகங்களில் சாய்தளம் அமைத்தல், நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.