fbpx
Homeபிற செய்திகள்பிரதமர் மோடி பிறந்தநாள் விழா: பாஜக சார்பில் திருப்பூரில் இலவச மருத்துவ முகாம்கள்

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா: பாஜக சார்பில் திருப்பூரில் இலவச மருத்துவ முகாம்கள்

பாஜக சார்பில் திருப்பூரில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளை இணைக்கும் நிகழ்வு இன்று நடை பெற்றது.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பிரதமரின் பிறந்த நாளை மக்களின் சேவை நாளாக பொதுமக்களுக்கு பயனுள்ளதாக ஆக்கும் வகையில் திருப்பூர் பாஜகவினர் சிறப்பு மருத் துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த வகையில் திருப்பூர் நெரு பெரிச்சல் பகுதியில் மருத் துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பாஜகவின் மாவட்ட செயலாளர் செந்தில் வேல் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதில், பொதுமக்களுக்கு இ.சி.ஜி, இரத்த பரிசோதனை, சக்கரை கண்டறிதல் உள்ளி ட்ட பரிசோ தனைகள் நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் குறித்து எடுத்து உரைக்கப்பட்டது.

அத்துடன் பயனாளிகளை திட்டத்தின் கீழ் இணைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படது.

இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் மாவட்ட பொதுச் செயலாளர் கேசிஎம்பி.சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், மருத்துவ பிரிவு மாநிலச் செயலாளர் செந்தில்நாதன், மண்டல தலைவர் சுரேஷ் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளர் முருகன் , பாஜக மகளிர் அணி மண்டல தலைவி பானுமதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img