fbpx
Homeபிற செய்திகள்அண்ணா பிறந்த நாள் விழா: திருப்பூர் அதிமுக கொண்டாட்டம்

அண்ணா பிறந்த நாள் விழா: திருப்பூர் அதிமுக கொண்டாட்டம்

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் 115வது அண்ணா பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அஇஅதிமுக திருப்பூர் மாநகர மாவட்டம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான திரு.பொள்ளாச்சி. வி.ஜெயராமன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார். முன்னதாக அண்ணா பிறந்தநாள் விழா உறுதி மொழியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான சு.குணசேகரன், திருப்பூர் மாநகர மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img