fbpx
Homeபிற செய்திகள்டைம்ஸ் வில் புத்தகம் வெளியீடு

டைம்ஸ் வில் புத்தகம் வெளியீடு

மேனாள் நீதிபதி ரத்தினவேலுவின் ஊக்கமளிக்கும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான ” Time’s will” (டைம்ஸ் வில்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அதிகாரிகள் சங்க நூற்றாண்டுக் கட்டிடத்தில் வெளியிடப்பட்டதை இலக்கியச் சமூகமும் நீதித்துறை பெருமக்களும் கொண்டாடினர். 

“டைம்ஸ் வில்” வாசகர்களுக்கு அவரது எண்ணங்கள், உணர்ச்சிகளின் குவியலை படம்பிடித்து, ஒரு உத்வேக பயணத்தை வழங்கும் என நிகழ்வில் தெரிவித்தனர்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் நீதியரசர் C.V. கார்த்திகேயன், நீதிபதி  எஸ்.பாஸ்கரன், பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜி. பக்தவஸ்தலம், முனைவர் பேராசிரியர் ஆம்ஸ்ட்ராங், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர். பி.கே. மனோகரன், விஐடி கல்லூரி நிறுவனங்களின் இணை பதிவாளர் பி.ஆர்.சம்பத் ஐ.ஏ.எஸ். (ஓய்வு.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலின் முதல் பிரதியை  நீதிபதி கார்த்திகேயன் வெளியிட,  நீதியரசர் எஸ். பாஸ்கரன், தலைவர் (ஓய்வு), தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img