என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நெய்வேலி மற்றும் புதுச் சேரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளு டன் இணைந்து கரிவெட்டி கிராமத்தின் நில உரிமையா ளர்கள் மற்றும் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி முதலீடு மற்றும் திட்டமிடல் தொடர்பான பயிற்சியை நெய்வேலியில் நடத்தியது.
இதற்கு சுரங்கங்கள் மற்றும் நிலத்துறை செயல் இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ் தலைமை தாங்கினார். நிலத்துறை பொது மேலாளர் ஸ்ரீனிவாச ராகவன் மற்றும் நிலத்துறை துணை பொது மேலா ளர் சேகர் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.
பயிற்சியில் நில இழப்பீட்டு நிதியின் விவேகமான மற்றும் பாதுகாப்பான முதலீடு, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் எதிர் காலத்தில் அவர்களின் குடும் பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை குறித்த மதிப்புமிக்க வழிகாட் டுதல்களும், பரிந்துரைகளும் வழங்கப்பட்டது.