fbpx
Homeபிற செய்திகள்கடலூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கடலூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கடலூர் வட்டம், கண்டகாடு பகதியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ்  தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவையை வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் ஒரு கால்நடை பெரு மருத்துவமனையும், 5 கால்நடை மருத்துவமனையும், 92 கால்நடை மருந்தகங்களும், 52 கால்நடை கிளை நிலையங்களும், ஒரு நடமாடும் கால்நடை மருந்தகமும், ஒரு கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி நிலையமும்,  157 கால்நடை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,53,663 மாடுகளும், 6,031 எருமை மாடுகளும், 42,675 செம்மறியாடுகளும், 3,41,587 வெள்ளாடுகளும், 9,50,457 கோழிகளும், 8,280 பன்றிகளும் விவசாய பெருமக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

அவற்றினை பாதுகாத்தல், பெருக்குதல் (ம) வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தேசிய கால்நடை நோய் தடுப்புதிட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் வரும் ஜீன் மாதம் 10ம் தேதி முதல் ஜீலை 10ம் தேதி வரை ஐந்தாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி அனைத்து கிராமங்களிலும் 3.0 லட்சம் எண்ணிக்கை உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் 100% தடுப்பூசிப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கால் (ம) வாய் நோயானது (கோமாரி) கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம்.

ஆகவே, இந்த நோயை கால்நடைகளுக்கு ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள செயல் திட்டம் தீட்டி ஆண்டுக்கு இருமுறை வீதம் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி 4 சுற்றுக்கள் முடிவடைந்து விட்டது. தற்போது ஜூன் மாதம் 10ம் தேதி முதல் ஜூலை மாதம் 10ம் தேதி வரை ஐந்தாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி தேசிய கால்நடைநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகரியங்கள் மற்றும் நகராட்சிகளில் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது

இதனடிப்பபையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள 3.0 லட்சம் கால்நடைகளுக்கும்  தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.     

படிக்க வேண்டும்

spot_img