Homeபிற செய்திகள்'தெண்டிரை' நூல் வெளியீட்டு விழா

‘தெண்டிரை’ நூல் வெளியீட்டு விழா

நூல் ஆசிரியர் ஏ.சாந்தி பிரபு எழுதிய “தெண்டிரை”நூல் வெளியீட்டு விழா தூத்துக்குடியில் நடந்தது. நூலை தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா வெளியிட்டு வாழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராசு தலைமை தாங்க, கவிதைச் சாரல் பதிப்பாளர் பேச்சி யம்மாள் ப்ரியா முன்னிலை வகித்தார்.
அன்னம் காலாண்டிதழ் அருட்தந்தை செல்வராஜ் ஆசியுரையுடன், பொறியாளர் ஏகாந்தலிங்கம் வரவேற்புரை வழங்கினார்.
மக்கள் சக்தி இயக்கம் மாநில தலைவர் மருத்துவர் த.இராசலிங்கம் நூல் அறிமுகவுரை வழங்கினார்.
விழாவில் ஏராளமான வாசகர்கள் பங்கேற்றனர். நிறைவாக திருமலை பிரபு நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img