Homeபிற செய்திகள்தேசிய அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ மாணவிகள் அசத்தல்

தேசிய அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ மாணவிகள் அசத்தல்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 18-வது தேசிய அளவிலான இளையோர் ரோல் பால் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், மாணவர், மாணவியர் இரு பிரிவுகளிலும் ராஜஸ்தான் அணி முதலிடம் பிடித்தது. மாணவியர் பிரிவில் தமிழ்நாடு அணி 3வது இடத்தைப் பிடித்தது.

இப்போட்டியில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. தொடக்க விழாவில் அமைச்சர் வி. சம்பத்குமார் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
மாணவர் பிரிவில் உத்தரப் பிரதேசம் 2வது இடத்தையும், கேரளம் 3வது இடத்தையும், தமிழ்நாடு 4வது இடத்தையும் பிடித்தன. மாணவியர் பிரிவில் ஜம்மு காஷ்மீர் 2வது இடத்தையும், தமிழ்நாடு 3வது இடத்தையும், கிளப் புனே 4வது இடத்தையும் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் மகேஸ்வரன், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ஆத்மநாதன், வெல்னஸ் பயிற்சியாளர்கள் முத்துக்குமார், அனுப்ரியா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.கொங்குநாடு கல்லூரி செயலாளர் வாசுகி, உடற்கல்வி இயக்குநர் கவிதாஸ்ரீ, ரோல்பால் நிறுவனர் ராஜு தபடே, சாய் அமைப்பைச் சேர்ந்த ராய், ஆர்.பி.எப்.ஐ. தலைவர் தபன் ஆச்சார்யா, செயலாளர் பிரதாப் பாகர், ஐ.ஆர்.பி.எப். அமைப்பைச் சேர்ந்த ஸ்டீபன் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்வு செய்யப்படும் 22 வீரர்கள், மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள உலக அளவிலான இளையோர் ரோல் பால் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img