fbpx
Homeபிற செய்திகள்பழமை போற்றும் மல்லர் கம்பம் விளையாட்டு

பழமை போற்றும் மல்லர் கம்பம் விளையாட்டு

பல்லவர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற மல்லர் கம்பம் விளையாட்டு சிறிது சிறிதாக தமிழகத்தில் பிரபலமானது.

இக்கலை குறித்து தேசிய பயிற்சியாளர் கீதா கூறியதாவது: அழிந்துவிட்ட இக்கலையை விழுப்புரத்தைச் சேர்ந்த உலக துரை ஐயா மற்றவர்களுக்கு சொல்லித் தந்தார். அதன் அடிப்படையில் இன்று பல மாவட்டங்களில் இக்கலையை மாணவ மாணவிகளுக்கு பலர் சொல்லி தருகின்றனர். தமி ழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை இதை சொல்லித்தர விழுப்புரத்தில் பயிற்சி மையம் அமைத்துள்ளது. மத்திய மாநில அரசுகள் இதை அங்கீகரித்துள்ளது.

ஈரோட்டில் தற்பொழுது 4 பள்ளிகள் மற்றும் ஈரோடு வில்லரசம்பட்டி விளையாட்டு கிராமத்திலும் இக் கலையை தற்போது நான் சொல்லித்தருகிறேன். ‘மல்யுத்த வீரன்’ என்று பொருள்படும் ‘மல்லா’ மற்றும் ‘தூண்’ என்று பொருள்படும் ‘கம்பா’ ஆகிய சொற்களிலிருந்து மல்லர் கம் பம் பெயர் வந்தது. இந்த விளையாட்டு சங்க காலத்தில் தோன்றியதாக நம்பப்படுகி றது. அப்போது மன்னர்களும் வீரர்களும் தங்கள் வலிமை யைப் பேணுவதற்காக இந்தப் பயிற்சியை செய்தனர். இது பண்டைய தமிழ் இலக்கியங் களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் இது புத்துயிர் பெற்றதாகக் கருதப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரத் தில் (1012-1044) இது குறித்த சிற்பம் உள்ளது. ஒருவேளை அது நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இது முக மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் காணப்பட்டது.
மல்லக்கம்பத்தின் ஆரம்ப கால எடுத்துக்காட்டுகள், கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 1 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சந்திரகேதுகார் மட் பாண்டங்களில் காணப்படுகின்றன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், சீன பௌத்த யாத்ரீகரான சுவான்சாங், மேற்கு சாளுக்கிய மன்னர் சோமேஷ்வரன் III என்பவரால் கி.பி. 1135 இல் எழுதப்பட்ட சமஸ்கிருத செவ்வியல் நூலான ‘மனசோல்லாசா’, கிபி 1610 ஆம் ஆண்டின் ஒரு ராஜபுத்திர ஓவியம், கிபி 1670 ஆம் ஆண்டின் ஒரு முகலாய ஓவி யம், 19ஆம் நூற்றாண்டில் ஜான்சி ராணி லட்சுமிபாய் மல்லக்கம்பம் கற்றுக்கொண்டது போன்ற குறிப்புகள் உள்ளன.

1936 கோடைக்கால ஒலிம்பிக் போட்டி, 1958 இல், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டிகளில் இது அறிமுகமானது. இந்திய ஜிம் னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு (GFI) இதை அங்கீகரித்து NGC போட்டிகளில் சேர்க்க முன் மொழிந்தது. முதல் தேசிய மல்லக்கம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 1962 இல் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றன. 1968ல், இந்த விளையாட்டு அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடை யேயான ஜிம்னாஸ்டிக்ஸ் சாம் பியன்ஷிப் போட்டிகளில் அறி முகப்படுத்தப்பட்டது. 1976 வரை, தேசிய மல்லக்கம்பப் போட்டிகள் ஆண்டுதோறும் ஜிஎஃப்ஐ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தின் உஜ் ஜயினில் உள்ள பம்ஷங்கர் ஜோஷி மற்றும் பிற மல்லக்கம்ப ஆர்வலர்கள், இந்திய மல்லக்கம்ப கூட்டமைப்பு (Mallakhamb Federation of India) என்ற அகில இந்திய அளவிலான அமைப்பை நிறுவினர். இந்த புதிய விளையாட்டுச் சங்கம், முதல் அகில இந்திய தேசிய மல் லக்கம்பப் போட்டிகளை 1981 ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் 29 வரை மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினில் ஏற்பாடு செய்தது.
1937 முதல் மல்லக்கம்ப போட்டியில் மூன்று வகைகள் உள்ளன: கம்ப மல்லக்கம்பம், தொங்கும் மல்லக்கம்பம், கயிறு மல்லக்கம்பம்.
கம்ப மல்லக்கம்பம் பொது வாக ஆண்களாலும், கயிறு மல்லக்கம்பம் பெண்களாலும் அதிகம் பயிற்சி செய்யப்படுகிறது. அனைத்து மல்லக்கம்பப் போட்டிகளும் இந்திய மல்லக் கம்பக் கூட்டமைப்பால் உரு வாக்கப்பட்ட விதிகளின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகின்றன, மேலும் 28 மாநிலங்கள் இக் கூட்டமைப்புடன் இணைக்கப் பட்டுள்ளன. 2019-ல் நடைபெற்ற முதல் உலக மல்லக்கம்ப சாம்பி யன்ஷிப் போட்டியில் ஹிமானி உத்தம் பரப் கயிறு லாங் செட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

படிக்க வேண்டும்

spot_img