fbpx
Homeபிற செய்திகள்எட்டயபுரம் அரண்மனையில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

எட்டயபுரம் அரண்மனையில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பொங்கல் திருநாள் அன்று மாலை எட்டயபுரம் அரண்மனையில் பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி எட்டயபுரம் சமஸ்தானம் 42-வது பட்டம் சந்திர சைதன்யா மகாராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய தலைவர்கள், வர்த்தக சங்க தலைவர் உள்பட்ட பிரமுகர்கள், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எட்டய புரம் சிவன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவது பற்றியும், சித்திரை தேரோட்டம் மீண்டும் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மகாராஜா, எட்டயபுரம் நகர வளர்ச்சி சம்பந்தமான பொது மக்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img