fbpx
Homeபிற செய்திகள்பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘தி ஜங்கிள் புக்’ லைவ் நிகழ்ச்சிகோவை புரோஜோன் மாலில் தொடங்கியது

பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘தி ஜங்கிள் புக்’ லைவ் நிகழ்ச்சிகோவை புரோஜோன் மாலில் தொடங்கியது

கோவையில் முதல் முறையாக, புரோஜோன் மால், பவர்கிட்ஸ் என்டர் டெயின்மென்ட், மும்பை DQ என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து நடத்தும் ‘தி ஜங்கிள் புக் & அட்வென்ச்சர் லைவ் எக்ஸ்பீரியன்ஸ்’ இந்நிகழ்ச்சி 2025 ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறுகிறது.


இந்த நிகழ்ச்சி புரோ ஜோன் மாலின் மெயின் ஏட்ரியத்தில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசம். குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு ரூ.149 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தி ஜங்கிள் புக் தொடரில் வரும் கதாபாத்திரமான பாலுவுக்கு உணவளித்தல், மோக்லிக்கு காட்டில் வழிகாட்டுதல், ஆபத்தான நதியைக் கடத்தல், பகீராவுக்காக ஆப்பிள் சுடுதல் ஆகிய குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, JB பலூன்கள், ஸ்டிக்கர்கள், லேபிள்கள், வண்ணமய மாக்கல் புத்தகங்கள், சுவரொட்டிகள் ஆகியவை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

டிக்கெட்டுகள் Ticketprix.com என்ற இணைதளத்திலும், புரோ ஜோன் மால் கவுண்டரிலும் கிடைக்கும். இதைத்தவிர, விளையாட்டு சாகசங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேற்கண்ட நிகழ்வுகள் குழந்தைகளுக்கும், அவர்தம் பெற் றோருக்கும் வித்தியாசமான அனுபவமாக அமையும் என்கின்றனர் புரோஜோன் மால் நிர்வாகிகள்.

படிக்க வேண்டும்

spot_img