fbpx
Homeபிற செய்திகள்சுதந்திர தினத்தையொட்டி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 400 பேருக்கு நல உதவிகள் வழங்கி சுதந்திர...

சுதந்திர தினத்தையொட்டி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 400 பேருக்கு நல உதவிகள் வழங்கி சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

சுதந்திர தினத்தையொட்டி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடந்த ஐம்பெரும் விழாவில் 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சுதந்திர தின விழா மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பிறந்தநாள் விழா என ஐம்பெரும் விழா கோவை கே.என்.ஜி புதூர் எம்ஜிஆர் நகர் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் நடை பெற்றது. இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற விழாவிற்கு கோவை மாவட்ட தலைவர்.

என்.கே.ஆர்.ராஜா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலை வர் சந்தானகுமார், தொண்டாமுத்தூர் தலைவர் மணிமாறன், கவுண் டம்பாளையம் பொருளாளர் வில்சன் பி தாமஸ் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
சுதந்திர தின கொடியை ராஜாராமச்சந்திரன் ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து நோட்டு புத்தகங்கள் வழங்கப் பட்டது. நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.

கே.என்.ஜி புதூர் கிராமத்தை தத்தெடுத்து கிராமம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் முதியோர் ஆதரவற்றோர் விதவைகள் என 400 பேருக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.

மாலை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதியோர் மற்றும் உதவி களுக்கு ஐ ஜே கே கட்சியின் மாவட்டத் தலைவர். என்.கே.ஆர். ராஜா ராமச்சந்திரன் வழங்கினார் நிகழ்ச்சியில் பேசும்போது சுதந்திர தின நாளில் பாரிவேந்தர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம். இன்று காலை முதல் மாலை வரை 400 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளோம், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img