Homeபிற செய்திகள்தி ஐ ஃபவுண்டேஷன் 31வது கிளை நாமக்கல்லில் துவக்கம்

தி ஐ ஃபவுண்டேஷன் 31வது கிளை நாமக்கல்லில் துவக்கம்

கோவையை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் 31வது கிளை, நாமக்கல்லில் தொடங்கப்பட்டது.

மோகனூர் சாலையில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் அமைந்துள்ள புதிய மருத்துவமனை திறப்பு விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். தி ஐ ஃபவுண் டேஷன் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, சுரேஷ் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ. திலீப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் டாக்டர் குழந்தைவேல், குணசேகரன், பொன்னி சிங்கராஜ், கண் மருத்துவர்கள் குமணபூபதி, சரவணன், வக்கீல் எஸ்.கே.வேல் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

புதிய கிளையில் நவீன பரிசோதனை உபகரணங்கள், 2 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் 4 சிறப்பு கண் மருத்துவர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கண்புரை, லேசிக், விழித் திரை, கண் அழுத்த நோய், கருவிழை, குழந்தைகள் கண் மருத்துவம், கண் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன.

படிக்க வேண்டும்

spot_img