Homeபிற செய்திகள்கோவையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 628 மனுக்கள்

கோவையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 628 மனுக்கள்

கோவை, செப். 30
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக் களிடம் இருந்து 628 கோரிக் கை மனுக்களை பெற்றார்.
இதில், இலவச வீடு மற்றும் வீட்டுமனைப் பட்டா கோரி 415 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 5 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர் பாக 208 மனுக்களும் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் வழங்கிய ஆட்சியர், குறிப்பிட்ட காலத் துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.61 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக்கால் உபகரணங்களை வழங்கி னார். உலக சைகை மொழி தினத்தை முன்னிட்டு, காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் ஆங்கில எழுத்துக்களை சைகை மொழியில் செய்து காட்டி அரசு அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

படிக்க வேண்டும்

spot_img