கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் `டக்அவுட்’ விளை யாட்டு மையம் துவக்க விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கேம்ஃ போர்டு சர்வதேச பள்ளி தலைவர் அருள் ரமேஷ் பங்கேற்றார்.
சென்னையை அடுத்து கோவையில் முதல்முறை யாக டக் அவுட் (DUGOUT) விளை யாட்டு மையம் புரூக் பீல்ட்ஸ் வளாகத்தில் துவங் கப்பட்டது.
தமிழ்நாட்டின் முன் னணி விளையாட்டு மற்றும் இன்டோர் பொழுது போக்கு நிறுவனமான டக்அவுட் ஸ்போர்ட்ஸ் – என்டர்டெயின்மென்ட், தனது 8-வது மையத்தை கோவையில் உள்ள ப்ரூக்ஃ பீல்ட்ஸ் மாலில் துவக்கியது
புரூக்பீல்ட்ஸ் நான்கா வது தளத்தில் தி சினிமாஸ் எதிர்புறம் துவங்கி உள்ள டக் அவுட் விளையாட்டு மைய துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் தாளாளர் அருள் ரமேஷ் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்.

டக் அவுட் விளை யாட்டு மையத்தின் சிறப்பு கள் குறித்து டக் அவுட் நிறுவனர் பிரசாந்த் மற்றும் பங்குதாரர்கள் அனிருத் கண்ணன், பத்ரி நாரா யணன், ஹசைனுதீன் ஆகியோர் கூறுகையில், கோவையில் முதல் முறையாக மிகப் பெரிய நியான்-குளோ (Neon-Glow) இன்ஃப்ளேடபிள் பார்க் ஆக டக் அவுட் துவங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக முழுமையான நியான் ஒளி அலங் காரத்துடன் அமைக்கப் பட்டுள்ள இந்த இன்டோர் விளையாட்டு பூங்கா, குளோ-இன்-தி-டார்க் அனுப வத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள தாகவும் தெரிவித்தனர்.
நிஞ்ஜா கோர்ஸ், நீளமான ஸ்லைட்கள், இன்ஃப்ளேடபிள் ராக் கிளைம்பிங், சர்ஃபிங் ஸோன், ஸ்பைடர் வால் சவால்கள், ஃபோம் பிட், பால் பிட் மற்றும் பல்வேறு தடையமைப்பு (Obstacle)விளையாட்டுகள் இதில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
உடற்பயிற்சியையும் உற்சாகமான பொழுது போக்கையும் ஒருங்கி ணைக்கும் இந்த நவீன வசதி, 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் நண்பர் குழுக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தளமாக அமைகிறது. நியான்-குளோ கருத்தாக்கம், பாரம்பரிய இன்ஃப்ளேடபிள் விளை யாட்டுகளை புதிய காட்சி அனுபவமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தனர்.



