fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போதைப்பொருளுக்கு எதிராக பரதநாட்டிய மாரத்தான்

கோவையில் போதைப்பொருளுக்கு எதிராக பரதநாட்டிய மாரத்தான்

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியைச் சேர்ந்த ரங்காஸ் அகாடமி பரதநாட்டியப் பள்ளி சார்பில் “டான்ஸ்தான்” என்ற பெயரில் பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பரதநாட்டியம் ஆடியபடியே மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


இதில் ரங்காஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் நடன ஆசிரியர் சுபா வசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் போதைப்பொருளுக்கு எதிராக பரதநாட்டிய மாரத்தான் நடத்தப்படுவது இதுவே முதல் முறை, என்றார். இந்த நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி காவல்துறையினர், கிங் உடற்பயிற்சி கூட நிர்வாகிகள், ஸ்ரீ கலை பியூட்டி பார்லர், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img