தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அண்ட் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்தியா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி, உடற்கல்வித்துறை, காமராஜ் மகளிர் கல்லூரி,கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி, பிளாக் ஃபாரஸ்ட் லீட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, யோவா அகடமி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை, அனைத்து கிராமிய கலைச் சங்கங்கள் தற்காப்பு கலை சங்கங்கள் தென் மண்டல தமிழக கிராமிய கலைச் சங்கங்கள் இணைந்து 3வது தமிழன்டா சங்கமம் ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் 9ம் தேதி காலை 6 மணிக்கு 5கிலோமீட்டர் தூரம் ஓட்டப்பந்தயம் மாரத்தான் போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். காமராஜ் கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் முனைவர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். அது ஐந்து பிரிவுகளில் நடைபெற்றது.
பள்ளி அளவில் மாணவர்களுக்கு, மாணவியர்களுக்கு தனியாகவும் கல்லூரி அளவில் ஆண், பெண்களுக்கு தனியாகவும் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தனியாகவும் மொத்தம் ஐந்து பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ 5000 இரண்டாம் பரிசு ரூ 3000 மூன்றாம் பரிசு ரூ 2000 என்று வழங்கப்பட்டது. ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழன்டா விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு பொங்கல் விழா காமராஜ் கல்லூரி, காமராஜ் பெண்கள் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இளவட்டக்கல் தூக்குதல், அம்மியில் தேங்காய் சில்ரைத்தல், ஆட்டு உரலில் மாவு அரைத்தல், பம்பரம், கோலிக்கா ஆட்டம், கிட்டி கம்பு, நொண்டி அடித்து விளையாடுதல் உட்பட பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றது. பின்னர் பரிசளிப்பு விழா நிகழ்ந்தது.
இந்த நிகழ்வில் சைன் யோகா பவர் நிறுவனர் டாக்டர் தனலட்சுமி வரவேற்புரை வழங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் பழரசம் பா விநாயகமூர்த்தி தூத்துக்குடி மாநகர ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த நிகழ்வில் தமிழன்டா இயக்கம் கலைக்குழு கௌரவ தலைவர் அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி நன்றியுரை வழங்கினார்.
மாணவ மாணவியர் மற்றும் பேராசிரிய பெருமக்கள் மொத்தம் 523 பேர் வெற்றிலை பாக்கு போடும் நிகழ்வில் பங்கேற்று உலக சாதனை படைத்தனர். 1000 பனை கொட்டைகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது. இரண்டாவது நாள் நிகழ்வில் பனை சார்ந்த கண்காட்சியும் இடம்பெற்றது.
காலை 10 மணிக்கு காமராஜ் கல்லூரி வளாகத்தில் நாட்டு நாய்கள் கண்காட்சி பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு மாநில அளவில் சிலம்பம், யோகா போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடந்தது. இதில் அயிரவன் பட்டி தொழிலதிபர் எம் சி முருகேச பாண்டியன், திருச்செந்தூர் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் பொன் முருகன், கோவை சமூக ஆர்வலர் ஆசிரியர் பி. ரமேஷ், சமூக சேவகர் திருநெல்வேலி நாஞ்சை ரவி, திருச்செந்தூர் பட்டி செல்லப்பா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக செயலாளர் லாரன்ஸ் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு கவியரங்கத்தை தொடங்கி வைத்தார். மூன்றாவது நாள் நிகழ்வில் காலை 7 மணிக்கு நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. தென்காசி மாவட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 8 மணிக்கு கும்பாவில் பழைய கஞ்சி குடிக்கும் நிகழ்வு இதில் 500 பேர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர், 523 பேர் பங்கேற்ற கோலமிடுதல் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் தமிழக வெற்றி கழக அஜிதா ஆக்னல் வழக்கறிஞர்கள் அருணா தேவி, ரமேஷ் பாண்டியன் தொழிலதிபர் டி பி எஸ் பொன் குமரன் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். அரவிந்த் கண் சிகிச்சை முகாமை ஸ்பிக் முழு நேர இயக்குனர் கி.பாலு தொடங்கி வைத்தார். 500பேர் பழைய சோறு சாப்பிடும் நிகழ்வை அத்தி மர பட்டி விவசாயி கௌரவ தலைவர் தமிழன்டா இயக்கம் கலைக்குழு ஜோதிமணி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் நூற்றுக்கு மேற்பட்ட கலைக்குழு கலைஞர்கள் கலை நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள். மாலையில் தமிழன்டா விருது வழங்கும் நிகழ்வு பரிசளிப்பு போன்றவை நடந்தது.
விழாவில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் தமிழர் பண்பாடு கலை மருத்துவம் போன்றவை எல்லாம் சிறப்பிடம் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓய்வு இல்லாமல் உழைத்துக். கொண்டு இருக்கிறார் தமிழ்நாடு அரசு தமிழர் கலைகளை மேம்படுத்துவதற்காக அக்கா கனிமொழி அவர்களின் தலைமையில் சென்னையில் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார்கள் நாட்டுப்புற கலைகளை அரசு விழாக்களில் பயன்படுத்தும் என்கின்ற உத்தரவையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் அதன்படி தமிழர் கலைகளும் மேலாக வேண்டும் என்பதற்காக இயன்ற அமைச்சர் பெருமக்களும் முன்னெடுத்து வருகிறார்கள் தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் மூன்றாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது மட்டற்ற மகிழ்ச்சி செண்டை மேளத்தை அரசு விழாக்களிலும் அரசியல் விழாக்களிலும் அடிக்க கூடாது என்று தமிழன்டா இயக்கம் கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அறிவுறுத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியே தமிழர் கலைகள் மேலோங்க வேண்டும் என்பதற்காக ஜெகஜீவன் முயற்சி எடுத்து வருகிறார். பாராட்டுகிறோம் என்று பேசினார் முன்னதாக தமிழன்டா இயக்க கௌரவ தலைவர் அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி வரவேற்புரை வழங்கினார்.
நாட்டார் வழக்காற்றில் துறையில் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி உடற்கல்வித் துறை தலைவர் டாக்டர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில மகளிர் அணி துணை தலைவர் சண்முக குமாரி கலந்து கொண்டு வெற்றிலை பாக்கு போடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினர் எட்டையாபுரம் கலைமாமணி முத்துலட்சுமி கோபி கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்வில் தம்பாலூரணி மந்திரமூர்த்தி குளியலின் ராஜ மேளம் ஆறுமுகநேரி மலை சாமி குழுவினரின் ராஜ மேளம் முக்காணி தனபால் குழுவினர் உருமி மேளம் சோமு குழுவினர் உறுமி மேளம் உட்பட பல பாரம்பரிய இசைக் குழுவினரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது. விழாவில் தமிழ் இந்தி திரைப்பட இயக்குனர் சில்லாட்ட புகழ் சிவராகுல் கலந்து கொண்டார். தென்னக நாட்டுப் புற கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் எட்டையாபுரம் கோபி கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்சி சண்முகையா கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினார் விழாவில் பி எஸ் டி ஆர் அக்ரோஃபாம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் திருமணிராஜா, கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி உரிமையாளர் ரைபின் தார்ச்சூஸ் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மூன்று நாட்களும் இயற்கை மருத்துவம், வர்மம், ஓமியாபதி, சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டது ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். 3 நாட்களும் இலவசமாக கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு கண்கண்ணாடி, வழங்கப்பட்டது ஆபரேஷன் போன்றவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று நாட்களும் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. மூன்று நாட்களும் ஆய்வு செய்து யோவா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. 11ஆம் தேதி காலை 8 மணிக்கு கோலமிடும் உலக சாதனை 45 நிமிடங்களில் 523 பேர் கலந்து கொண்டனர்.



