தூத்துக்குடி 30வது வார்டு டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் கோலப்போட்டி நடை பெற்றது. விழாவிற்கு பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், பா.ஜ.க. ஆன்மிகப்பிரிவு இணை அமைப்பாளர் உஷாதேவி ஆகியோர் கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் எஸ்.கே.ஆர்.தனசேகரன், வேலுச்சாமி, கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் கோலப்போட்டி ஏற்பாடுகளை 30வது வார்டு பா.ஜ.க. பிரமுகர் நடிகர் காசிலிங்கம் செய்திருந்தார்.



