fbpx
Homeபிற செய்திகள்தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பாஜக அரசு!

தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பாஜக அரசு!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், எந்த மாநிலத்திலும் அலுவல் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் 2,533 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.


“செம்மொழி” என்று அறிவிக்கப்பட்ட முதல் மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.113.48 கோடிதான்.


அதாவது பாரம்பரிய மொழிகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு ஆண்டுதோறும் சராசரியாக 230.24 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், பல கோடி பேர் பேசும் மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 13.41 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.


அதனால்தான், தனித்துவமிக்க தமிழைப் பேசும் மக்கள், பா.ஜ.க.வின் வெறுப்பு நடவடிக்கைகளையும், ஓரவஞ்சனை நடவடிக்கைகளையும் உணர்ந்து, தங்களது ஒற்றை விரலைக் கொண்டு தேர்தல்களில் தக்க பதிலடி தந்து வருகின்றனர். தமிழ்நாடு மக்களின் இந்நடவடிக்கை, தென் இந்தியாவில் மட்டுமல்லாது, தேசிய அளவில் தற்போது பரவத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் உரிமை முழக்கம், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டாக மாறி வருகிறது.


இவ்வாறான சூழலில்தான், தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பதற்காக மதுரை, கோவை, சென்னை என பெருநகரங்களுக்கு வருகைதர பெரும் முனைப்பு காட்டி வருகிறார் ஒன்றிய உள்துறை அமித்ஷா.

ஆனால், இந்த முனைப்பு, ஏன் தமிழுக்கும் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கும் உரிய நிதி வந்தடைய காட்டப்படுவதில்லை? என்ற கேள்விக்கு, ஒன்றிய பா.ஜ.க அரசு இன்றளவும் சரியான பதில் தரவில்லை.
காரணம், கருத்தியல் முரண். தமிழ்நாட்டில் முழங்கப்படும் சமூக நீதி!

படிக்க வேண்டும்

spot_img