தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தருமபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் 5-வது மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட தலைவர் க.மாது மற்றும் மாவட்ட செயலாளர் கி.ராஜா தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஞி.மைதிலி வரவேற்றார்.
இந்த போட்டியில் 7 வயது முதல் 30வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை பல் மருத்துவர் ரமேஷ்பாபு போட்டிகளை துவக்கி வைத்தார். மினி சப்ஜுனியர், சப்ஜுனியர், ஜுனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் ஆண், பெண் தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றது
கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல்கம்பு வீச்சு, கம்புச்சண்டை உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கி.கோவிந்தசாமி, தொழில் அதிபர் சுரேஷ்குமார், பெ.சாந்தமூர்த்தி, மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர், தர்மபுரி நகரமன்ற உறுப்பினர் தேவாசெந்தில், ஆறுமுகம் ஆகியோர் பரிசளித்து பாராட்டுகளை தெரிவித்தனர். மாவட்ட பொருளாளர் கோமதி நன்றி உரையாற்றினார்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர்.



