சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பூசாகோ தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் பிரிவு பட்டமளிப்பு விழா, கல்லூரி நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி.ஆர். தைலா தலைமை வகித்தார். பயன்பாட்டு கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் ஷைனா ஷீன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி இந்தியா (பெங்களூரு) மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் வெங்கட் பத்மநாபன் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு காலத்தில் தொடர்ச்சியான கற்றல், புதுமை மற்றும் திறன் மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.

விழாவில் பல்வேறு அறிவியல் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 397 மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களும், 9 தரவரிசை மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. கல்வி மற்றும் பன்முகத் திறன்களில் சிறந்து விளங்கிய மாணவி ஷுகி ஆர்., குஹப்ரியன் அறக்கட்டளை சார்பிலான பன்முகத் திறனாளர் விருதைப் பெற்றார்.

இந்நிகழ்வில், கல்லூரி யின் 75-வது பிளாட்டினம் விழாவும், பூசாகோ & சன்ஸ் அறக்கட்டளையின் 100-வது ஆண்டு விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



