இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை நாடு முழுவதும் “கூட்டுறவு வாரம்“ கொண்டாடப்படுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சி கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை, கோவை மண்டல இணைப்பதிவாளர் அ. அழகிரி கொடியசைத்து துவக்கி வைத்தார். சாய்பாபா காலனி மற்றும் என்.எஸ்.ஆர். ரோடு பகுதிகள் வழியாக நடைபெற்ற பேரணியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
பேரணி நிறைவில், மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சரக துணைப்பதிவாளர், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு), துணைப்பதிவாளர் (பயிற்சி), துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



