fbpx
Homeபிற செய்திகள்25 பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கிய ஸ்பெக்ட்ரம் ரோட்டரி சங்கம்

25 பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கிய ஸ்பெக்ட்ரம் ரோட்டரி சங்கம்

கோவையில் பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை ஒருங் கிணைக்கும் முயற்சியாக 25 பெண்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப் மற்றும் பேக்கர் ஹியூஸ் நிறுவனம் சார்பில் “சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா கோவை வேலாண்டிபாளையத்தில் நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரிக்கால் தலைவர் மற்றும் சிறுதுளி அறக்கட்டளை நிர்வாகி வனிதா மோகன் கலந்து கொண்டு மின்சார ஆட்டோ வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.


இதில் ரோட்டரி கிளப் நிர்வாகி ராகவேந்திரன் லட்சுமணன், திருமுகம் விக்னீஸ், பேக்கர் ஹியூஸ் மாநில மேலாளர் முருகானந்தம் ஜெய் கணேஷ், ரோட்டரி கோய முத்துர் ஸ்பெக்ட்ரம் சங்க தலைவர் ரோட்டேரியன். சி. அசோகன், செயலாளர் ரோட்டேரியன் டி.ஷாஃபிக் அஹமது மற்றும் திட்டத் தலைவர் ரோட்டேரியன் சம்பத் குமார், வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img