Homeபிற செய்திகள்கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய ‘டேசெட்’ இசை மையம் துவக்க விழா

கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய ‘டேசெட்’ இசை மையம் துவக்க விழா

கோவை உப்பிலிபாளை யத்தில் இசை ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய ‘டேசெட் மியூசிக் சென்டர்’ (TACET Music Center) என்ற புதிய இசை மையம் கோலாகலமாகத் தொடங் கப்பட்டது.

திருச்சி மற்றும் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் இந்த மையம் தற்போது உப்பிலிபாளையம் கோ-ஆபரேட்டிவ் காலனி, பெர்க்ஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் கிறிஸ்டியன் நார்மன், கிறிஸ்டோபர் நார்மன் மற்றம் டிஷான் சாமுவேல் ஆகியோரின் தலைமையில் இசைக் கலைஞர்களால் இசைக் கலைஞர்களுக்காக நடத்தப்படும் டேசெட் மையத்தை பங்குதார ராக இணைந்து சிந்தியா பிராங்க்ளின் ஒருங்கிணைத் துள்ளார்.

தொடக்க விழாவில் ஆப்டர்நூன், பிற்பகல் நாளிதழ்களின் நிர்வாக இயக்குநர் ஆடம் அப்பா துரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய மையத்தைத் திறந்து வைத் தார். நான்கு வயது முதல் முதியவர்கள் வரையிலான இசை ஆர்வலர்களுக்கான பியானோ, கிட்டார், டிரம்ஸ், குரல், வயலின், புல்லாங்குழல், வீணை போன்றவற்றில் நவீன பயிற்சிகள், இசைத் தயாரிப்பு, ஜாம் அறைகள், இசைக்குழுக்களுக்கான பயிற்சிகள், நேரடி இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இசை உலகிற்குத் தேவையான அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img