fbpx
Homeபிற செய்திகள்எஸ்விஜிவி பள்ளியில் நாடகம், பொம்மலாட்டம் மூலம் யானைகளை பாதுகாப்பதன் அவசியம்

எஸ்விஜிவி பள்ளியில் நாடகம், பொம்மலாட்டம் மூலம் யானைகளை பாதுகாப்பதன் அவசியம்

இந்திய வன உயிரின அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யானைகள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவையில் இந்த திருவிழா நடத்தும் பொறுப்பை தன்னார்வ தொண்டு நிறுவனமான ஓசை அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் யானைகள் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் காரமடை எஸ்.வி.ஜி.வி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். நிர்வாக அலு வலர் சிவசதீஷ்குமார் வர வேற்றார்.

இதில் மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டி பொம்மலாட்டம், குழு நாடகம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. குறிப்பாக காட்டு யானைகள் மின்வே லியில் சிக்கி உயிரிழப்பது, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது போன்ற நாடகங்கள் மாணவர்கள் மற்றும் பார் வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாஸ், காரமடை வனச்சரக அலு வலர் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே யானைகளை பாதுகாப் பதன் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img