fbpx
Homeபிற செய்திகள்‘கிண்டர் ஸ்கோகோ-பான்ஸ் கிரிஸ்பி’ பெர்ரெரோ குழுமத்தின் புதிய அறிமுகம்

‘கிண்டர் ஸ்கோகோ-பான்ஸ் கிரிஸ்பி’ பெர்ரெரோ குழுமத்தின் புதிய அறிமுகம்

சாக்லேட் மற்றும் மிட்டாய் தயாரிப் புகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஃபெர்ரெரோ குழுமத்தின் ஓர் அங்கமான ‘ஃபெர்ரெரோ இந்தியா பிரைவேட் லிமிடெட்’, ‘கிண்டர் ஸ்கோகோ-பான்ஸ் கிரிஸ்பி’-ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய தயாரிப்பின் மூலம், ஃபெர் ரெரோ இந்தியா நிறுவனம்
பேக்கேஜ் செய்யப்பட்ட இனிப்பு உணவுகளுக்கான பிரிவில் அதன் தடத்தை நன்கு பதிக்கும் வகையில் களமிறங்கியுள்ளது.

பிரபலமான அதன் கிண்டர் பிராண் டின் கீழ் – கிண்டர் ஸ்கோகோ-பான்ஸ் கிரிஸ்பி என்கிற ஒரு புதுமையான தயாரிப்பை இணைத்துள்ளது; இது சந்தோஷத்தைப் பகிரும் இனிமையான தருணங்களில் குடும்பங்களை ஒன்றி ணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுவைமிகு சாக்லேட் விருந்தாகும்.

ஃபெர்ரெரோ இந்தியா நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் ருடால்ஃப் செக்கெய்ரா பேசும்போது, ‘வெற்றிகரமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தயாரிப்பு’ என்கிற ஒரு தனித்துவமான புதுமையுடன் கிண்டர் ஸ்கோகோ-பான்ஸ் கிரிஸ்பியை வழங்கி – கிண்டர் தயாரிப்புகளின் வகைகளின் பட்டியலை விரிவுபடுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

கிண்டர் பிராண்ட்ஸின் இந்தியன் சப் கான்டினென்ட் பிராந்தியத்தின் மார்க்கெட்டிங் ஹெட், அமெடியோ அரகோனா கூறுகையில், கிண்டர் ஸ்கோகோ-பான்ஸ் கிரிஸ்பியின் அறிமுகம் மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img