ஐடிசியின்ன் சன்பீஸ்ட் மேரி லைட் (Sunfeast Marie Light)நடிகை ஜோதிகாவை புதிய விளம்பர தூதராக அறிவித்துள்ளது.
ஜோதிகா நடித்த புதிய மற்றும் இதயத்தைத் தொடும் தொலைக்காட்சி விளம்பரம் (®MC) மூலம், தமிழகத்தில் Sunfeast Marie Lite-ன் மறுதொடக்கத்தைக் கொண்டாடுகிறது.
இந்த விளம்பர படம், தம்பதிகளுக்கு இடையே வலுவான டீமை உருவாக்கும், உணர்வுப்பூர்வமான பலனையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ‘லைட் மொமன்ட்ஸ் மேக் எ ஸ்ட்ராங் டீம்’ என்ற டேக்லைன், கணவன் – மனைவி இடையே வலுவான பிணைப்புக்கு இன்றியமையாத லைட்டான தருணங்களின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்துகிறது.
‘வலுவான உறவுகள்: தம்பதிகளுக்கு இடையே லைட்டான தருணங்களில் இருந்து பிறக்கிறது’ என்பது தான் இந்த விளம்பர படத்தின் முக்கிய செய்தி.
ஐடிசி உணவுப் பிரிவின் பிஸ்கட் மற்றும் கேக்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அலி ஹாரிஸ் ஷேர் கூறியதாவது:
அபார திறமையால் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஜோதிகாவை Sunfeast Marie Light இன் அடையாளமாகக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். Sunfest Marie Ligh இன் நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வலுவான டீமை உருவாக்க உதவுவதே ஆகும்.
இந்த வலுவான உறவு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒரு கப் டீ மற்றும் Sunfest Marie Light பிஸ்கட்டுகளுடன் தரமான நேரத்தை செலவிடும்போது நிகழலாம். இது தம்ப திகள் ஒன்றிணைந்து, சிந்தித்து, பகிர்ந்து, அன்றாட சவால்களை சந்திப்பதற்கு மீண்டும் உத் வேகம் அளிக்கும் தருணம் என்றார்.
ஜோதிகா கூறுகையில், கணவன் – மனைவி இடையே வலுவான உறவை உருவாக்க, லைட்டான தருணங்களை போற்றும் பிராண்டின் கவனம் என்னுள் ஆழமாக எதிரொலிக்கிறது என்றார்.