fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரி கல்விச் சேவையின் 75-வது ஆண்டு விழா

நிர்மலா கல்லூரி கல்விச் சேவையின் 75-வது ஆண்டு விழா

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி, தனது கல்விச் சேவையின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, ‘உலகமயமாக்களுக்கான திறன்கள்’ என்ற தலைப்பில் விரிவுரை நடந்தது.

இத் தலைப்பில், கல்லூரியின் முன்னாள் மாணவியும், குஜராத் ஆத்மியா பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந் தருமான முனைவர் ஷீலா ராமச்சந்திரன் பேசும்போது, மாணவிகளிடையே நேர்மறை எண்ணச்சூழலை உருவாக்கினார்.

தற்போதைய காலகட்டத்தில் உள்ள சவால்களை இக்காலத் தலைமுறையினர் எதிர் கொள்ளும் திறத்தினைப் பற்றியும், அறிவின் புதிய பார்வைகளுக்கு மாணவிகள் தங்கள் எண்ணக் கதவினைத் திறக்கும் நுண்ணறிவுத் திறனை வளர்த்து உலகமயமாதலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிர்மலா கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், முதல்வர் அருட்ச கோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினர். கல்லூரி தேசியத் தர நிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளரும், விலங்கியல் துறைத் தலைவருமான முனைவர் பாலின் வசந்தி ஜோசப் வாழ்த்துரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img